Mutton Chops | மட்டன் சாப்ஸ் செய்முறை

Mutton Chops | மட்டன் சாப்ஸ்

மட்டன் சாப்ஸ் செய்ய தேவையான பொருட்கள்

மட்டன் -1 கிலோ, தேங்காய்பால் – 1கப் (திக்கான பால்), எண்ணெய் – தேவையான அளவு, மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்,மிளகு தூள் – 2 ஸ்பூன், சீரக தூள் -2 ஸ்பூன்,சோம்பு தூள் -2 ஸ்பூன்,இஞ்சி பூண்டு விழுது -1 ஸ்பூன்,கரம் மசாலா பொடி – 2 ஸ்பூன்,மிளகாய் பொடி – 2 ஸ்பூன், மிளகாய் பொடி – 2 ஸ்பூன்,உப்பு – தேவையான அளவு, கொத்தமல்லி இலை – சிறிதளவு, தண்ணீர் – தேவையான அளவு

Mutton Chops

மட்டன் சாப்ஸ் செய்முறை

முதலில் மட்டனை கழுவி சுத்தம் செய்து வைத்து கொள்ள வேண்டும், பின் கொத்தமல்லித்தழையை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் மட்டனைப் போட்டு அதனுடன் தேங்காய்ப்பால், மஞ்சள்பொடி, மிளருத்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள், இஞ்சி-பூண்டு விழுது, கரம் மசாலா பொடி, சிறிதளவு உப்பு மற்றும் மிளகாய்ப்பொடி போட்டு பிசறி 1 மணி நேரம் ஊற விட வேண்டும்.

பிறகு ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி குடானதும், அதில் ஊறவைத்துள்ள மட்டனைப் போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து தண்ணீர் வற்றும் வரை கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். பின் மட்டனில் தண்ணீர் வற்றியதும் மட்டனின் நிறம் மாறும்.

கடைசியாக ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கிளறிவிட்டு குக்கரை மூடி எட்டு விசில் வந்ததும் இறக்கி விட வேண்டும் பிறகு குக்கரில் ஆவி அடங்கியதும் குக்கரை திறந்து அடுப்பில் வைத்து சிறிது நேரம் கிளற வேண்டும் மசாலா அனைத்தும் மட்டனுடன் சேர்ந்து நன்கு வெந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சூப்பரான மட்டன் சாப்ஸ் தயார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top